Home நாடு நெதர்லாந்து பிரதமருக்கு இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு!

நெதர்லாந்து பிரதமருக்கு இராணுவ மரியாதையுடன் கூடிய வரவேற்பு!

490
0
SHARE
Ad

Visiting Netherlands Prime Minister Mark Rutte (L) shakes hand with Malaysian Prime Minister Najib Razak (R) during a welcoming ceremony in Putrajaya, outside Kuala Lumpur, Malaysia, 05 November 2014.  Rutte arrived for a one-day official visit to Malaysia. The visit is expected to strengthen the existing good bilateral relations between the two countries. புத்ராஜெயா, நவம்பர் 5 – மலேசியா வந்துள்ள நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவிற்கு இன்று புத்ராஜெயாவிலுள்ள டத்தாரான் பெர்டானாவில், அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு பெர்டானா புத்ராவிற்கு வருகை புரிந்த ருட்டேவை, பிரதமர் நஜிப் துன் ரசாக் வரவேற்றார்.

isiting Netherlands Prime Minister Mark Rutte (2-L) walks with Malaysian Prime Minister Najib Razak (3-L) after a welcoming ceremony in Putrajaya, outside Kuala Lumpur, Malaysia, 05 November 2014.  Rutte arrived for a one-day official visit to Malaysia. The visit is expected to strengthen the existing good bilateral relations between the two countries.

#TamilSchoolmychoice

நஜிப்புடன், துணைப்பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின், அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹம்சா, அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதரகங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் ரூட்டேவை வரவேற்றனர்.

Visiting Netherlands Prime Minister Mark Rutte inspects the Royal Guard of Honor during a welcoming ceremony in Putrajaya, outside Kuala Lumpur, Malaysia, 05 November 2014.  Rutte arrived for a one-day official visit to Malaysia. The visit is expected to strengthen the existing good bilateral relations between the two countries.

ருட்டேவிற்கு மலாய் இராணுவ உடையணிந்த 106 அதிகாரிகள் கொண்ட படை அரச மரியாதை செலுத்தியது. அதே வேளையில், இருநாட்டு தேசிய கீதங்களும் ஒலிக்கச் செய்யப்பட்டன.

சுட்டு வீழ்த்தப்பட்ட எம்எச்17 விமான பேரிடர் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இன்று மலேசியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.