சென்னை, நவம்பர் 5 – சமீபத்தில் கே.வி.ஆனந்த் ஒரு பிரபல நாளிதழில் ‘அனேகன்’ படத்தை பற்றி பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் ‘அனேகன்’ படத்தின் கதை முதன் முதலில் விஜய்க்கு தான் சொன்னேன், அவருக்கு கதை பிடித்தது.
இருந்தாலும் என்னால் இப்போதைக்கு நடிக்க முடியாது. அதுவும் கால அவகாசம் நிறந்த படமாக தெரிகிறது என்றார் விஜய். சரி என்ன செய்யலாம் என்று நினைக்கும் போத ஏன் நீங்கள் தனுஷை வைத்து படம் எடுக்கக் கூடாது.
இந்த கதை தனுஷுக்கு சரியாக இருக்கும் அவரை வைத்து படம் எடுங்கள் படம் மிகவும் அருமையாக வரும் என்று சொன்னார் விஜய். அவர் சொன்ன படி நான் நடந்தால் இன்று ‘அனேகன்’ படத்தை பார்க்கும் போது தனுஷின் நடிப்பு வியக்க தக்க அளவுக்கு படம் வந்துள்ளது.
#TamilSchoolmychoice
எனக்கு தெரிந்து கமல்ஹாசன் பிறகு காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்கும் நடிகர் தனுஷ். ‘அனேகன்’ பார்க்கும் போது உங்களுக்கே தெரியும் என்று தெரிவித்தார் கே.வி.ஆனந்த்.