Home நாடு மனைவியை கொன்றதாக நம்பப்படும் போதை ஆசாமி கைது!

மனைவியை கொன்றதாக நம்பப்படும் போதை ஆசாமி கைது!

636
0
SHARE
Ad

syabu

சுபாங் ஜெயா, நவம்பர் 5 – கடந்த வாரம் தாமான் பூச்சோங் ஜெயாவில் தனது மனைவியை கொடூரமாகக் கொலை செய்து விட்டு தப்பியோடிய 33 வயதான வாசுதேவன் பாலன் என்ற நபரை, காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது.

ஈப்போவில் நேற்று இரவு 11.30 மணியளவில் சியாபு என்ற போதைப் பொருளை அவர் பயன்படுத்திய போது, காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்து சுபாங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் யாஹாயா ராம்லி கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமை 25 வயதே ஆன தனது மனைவியை சித்திரவதை படுத்தி கொலை செய்த அந்த நபரை கைது செய்ததால் இந்த வழக்கு முடிவுக்கு வருகின்றது. இனி தனது மனைவியை கொலை செய்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து அவரிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு உண்மையை வெளிக்கொண்டு வரும்” என்று தெரிவித்துள்ளார்.

கணவரால் கொலை செய்யப்பட்டு இறந்த அப்பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரும் சியாபு போதைப் பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் பல வருடங்களாக அப்பெண்ணை அவரது கணவரே சித்திரவதை செய்துள்ளார் என்ற உண்மை கண்டறியப்பட்டது.

அப்பெண்ணின் இடது விலா எலும்பு முறிந்து இருந்ததோடு, உடலில் பல்வேறு இடங்களில் காயங்களும், தழும்புகள் கண்டறியப்பட்டன.

இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.