Home அவசியம் படிக்க வேண்டியவை பிடிபிடிஎன் கடன் குறைப்பா? மாணவர்களின் கல்விப் பயணத்தில் தடையை ஏற்படுத்தும் – டத்தோ முருகையா 

பிடிபிடிஎன் கடன் குறைப்பா? மாணவர்களின் கல்விப் பயணத்தில் தடையை ஏற்படுத்தும் – டத்தோ முருகையா 

592
0
SHARE
Ad

Murugiah T. Datoகோலாலம்பூர், நவம்பர் 5 –  உயர்கல்விக்கான கடனுதவியை (பிடிபிடிஎன்) குறைக்கும் முடிவை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டத்தோ முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஏழை இந்திய மாணவர்கள் பலருக்கு இந்தக் கடனுதவித் திட்டம்தான் அவர்களின் உயர்கல்விக் கனவை நிறைவேற்றி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பொதுப் பல்கலைக்கழகங்களுக்கான கல்விக்கடன் 5 விழுக்காடு வரை குறைக்கப்படும் என்றும், தனியார் பல்கலைக் கழகங்களுக்கான கல்விக்கடன் 15 விழுக்காடு வரை குறைக்கப்படும்” என்றும் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“பொதுப்பல்கலைக்கழங்களில் நுழைவது இந்திய மாணவர்களுக்கு கடினமாக உள்ள சூழ்நிலையில் பலரும் தனியார் பல்கலைக்கழகங்களையே நாடுகின்றனர். இத்தகைய நிலையில், கல்விக்கடன் குறைக்கப்படும் என்ற தகவல் கவலை அளிக்கிறது” என்று டத்தோ முருகையா கூறியுள்ளார்.

“ஏழை இந்திய மாணவர்கள் பலர் இந்தக் கல்விக் கடனையே நம்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பிடிபிடிஎன் கடனுதவியைக் குறைப்பதென்பது மாணவர்களின் எதிர்காலத்தில் பெரிய கேள்விக்குறியை எழுப்பும்” என்றும் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.

“பல்கலைக்கழக படிப்பு என்பது மாணவர்களின் கல்விப் பயணத்தில் மிக முக்கியமான காலக்கட்டம். இத்தகைய தருணத்தில் கல்விக்கடன் மறுக்கப்படுவதோ அல்லது குறைக்கப்படுவதோ அந்தப் பயணத்திற்கு மிகப்பெரிய தடையாக அமைந்துவிடும். கல்விக் கண்களை திறப்பதன் மூலமே ஒரு சமுதாயம் மேன்மை அடைய முடியும். அத்தகைய மேன்மையை அடைவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். எனவே உயர்கல்விக்கான கடனுதவியை குறைக்கும் முடிவை கல்வி அமைச்சு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நல்ல முடிவை எடுப்பதன் மூலம் ஏராளமான இந்திய மாணவர்கள் பயனடைவர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,” என டத்தோ முருகையா மேலும் தெரிவித்துள்ளார்.