Home வாழ் நலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தண்ணீர்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தண்ணீர்!

490
0
SHARE
Ad

waterநவம்பர் 6 – சிறுவயதில் இருந்தே தேவையான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் உடல் வளர்ச்சியும், சுறுசுறுப்பான வாழ்க்கையும் அவர்களுக்கு அமையும். பெரியவர்கள் தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால் பலநோய்கள் வராமல் தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

சிறுநீரகம் நன்றாக வேலை செய்யவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். மூட்டு வலி, முதுகு வலி பாதிப்பை தவிர்க்கவும், தோல் வறட்சி ஏற்படாமல் தடுக்கவும் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல தண்ணீர் அருந்துவது உடல் வலியினை நன்கு குறைக்கும்.

ht324கழிவுப் பொருட்கள் தண்ணீர் உதவியால் குடல், சிறுநீரகம் வழியாக வெளியேறுகின்றது.  நன்கு தண்ணீர் குடிப்போருக்கு சிறுநீரக கல் உருவாகும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் குடிப்பதே மூட்டுகளில் வழுவழுப்பு தன்மைக்கு உதவுகின்றது.

#TamilSchoolmychoice

தசை பிடிப்பு, சோர்வு போன்றவை உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படுவதன் காரணம் போதிய தண்ணீர் குடிக்காமையே.  புரதம் உடலில் சரிவர இருந்தாலே நல்ல சதை உருவாகும். இந்த புரதம் உடலில் சரியான முறையில் உருவாக்க தண்ணீரே காரணம். இல்லையெனில் அதிக கொழுப்பு உடைய உடலாகி விடும்.

ht1704நீங்கள் இளைக்க வேண்டுமா? உணவு அருந்துவதற்கு 10 நிமிடம் முன்னால் ஓரிரு டம்ளர் தண்ணீர் அருந்துங்கள். உணவு குறைவாகவே உண்ண முடியும். எடை தன்னால் குறைந்து விடும்.