டோக்கியோ, பிப்.26- ஜப்பானில் நேற்று 6.2 ரிக்டர் அளவுக்கு கடுமையான நலநடுக்கம் ஏற்பட்டது.
டோக்கியோவிலிருந்து 120 கி.மீ. உள்ள டாக்ஹிகி பகுதியை மையமாக கொண்டு, 10 கி.மீ ஆழத்தில் 6.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜப்பான் புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.
இதனால் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் கட்டிடங்கள் கடுமையான அதிர்ந்தன.
ஆனால் உயிரிழப்பு, காயம் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
நாட்டின் வடகிழக்கே உள்ள புகுஷிமா டைச்சி அணுமின் நிலையம் உள்ளிட்ட எந்த அணு உலைக்கும் பாதிப்பு இல்லை என்று டோக்கியோ மின் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2011 மார்ச் 11ம் தேதி ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி ஏற்பட்டு 19 ஆயிரம் பேர் இறந்தனர்.
புகுஷிமா அணு உலை சேதமடைந்து கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டது. இதனால் 1.60 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.