Home கலை உலகம் 13 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை!

13 மில்லியன் மலேசிய ரசிகர்களைக் கொண்டு அஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து முன்னிலை!

921
0
SHARE
Ad

survey2014கோலாலம்பூர், நவம்பர் 11 –  அண்மையில், நீல்சென் நிறுவனம், மலேசியாவில் வானொலி கேட்பவர்கள் அளவை ( Nielsen Radio Audience Measurement) கணக்கிட்டு வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அஸ்ட்ரோ வானொலி முன்னிலை வகிக்கின்றது.

வாரந்தோறும் 13 மில்லியன் பேர் அஸ்ட்ரோ வானொலிகளைக் கேட்பதாகக் கூறியுள்ளனர். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் கிடைத்த அளவான 12.6 மில்லியனை விட இந்த வருடம் கணிசமாக அதிகரித்திருக்கின்றது.

அதிலும் குறிப்பாக அஸ்ட்ரோவின் இஆர்ஏ பண்பலை, டிஎச்ஆர் (ராகா மற்றும் கேகார்) மற்றும் சினார் பண்பலை ஆகியவை முறையே 5.2 மில்லியன், 3.8 மில்லியன் மற்றும் 3.7 மில்லியன் வானொலி கேட்பவர்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், அஸ்ட்ரோ வானொலியின் காலைநேர நிகழ்ச்சி நாட்டின் மிகப் பிரபலமான காலைநேர நிகழ்ச்சிகள் என்ற பட்டியலில் 3 வது நிலையை இந்த வருடமும் தக்க வைத்துள்ளது.

நாட்டின் முன்னணி தமிழ் வானொலியாக டிஎச்ஆர் ராகா 1.9 மில்லியன் ரசிகர்களைக் கொண்டுள்ளதாக அஸ்ட்ரோ அறிவித்துள்ளது. Dr Jake Abdullah Astro

இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் குறித்து அஸ்ட்ரோ வானொலியின் தலைமை நிர்வாகி டாக்டர் ஜேக் அப்துல்லா (படம்) வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில், “அஸ்ட்ரோ வானொலி ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். திறமை வாய்ந்த தலைமை நிர்வாகம் இருப்பது தான் எங்களின் பிரபலமான மற்றும் புதுமையான நிகழ்ச்சிகள் உருவாகக் காரணமாக இருக்கின்றது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அஸ்ட்ரோ வானொலியின் கீழ் இயங்கும் சினார், டிஎச்ஆர் (ராகா & கேகார்), லைட் மற்றும் மெலோடி ஆகிய வானொலிகளை கேட்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் ஜேக் தெரிவித்துள்ளார்.