Home அவசியம் படிக்க வேண்டியவை ரெங்கசாமியின் நூல் வெளியீட்டுடன் வல்லினம் கலை இலக்கிய விழா 6

ரெங்கசாமியின் நூல் வெளியீட்டுடன் வல்லினம் கலை இலக்கிய விழா 6

623
0
SHARE
Ad

unnamed (5)கோலாலம்பூர், நவம்பர் 12 – வல்லினம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கலை இலக்கிய விழா கடந்த நவம்பர் 2-ம் தேதி தலைநகரில் அமைந்துள்ள கிராண்ட் பசிபிக் தங்கும் விடுதியில் சிறப்பாக நடைப்பெற்றது.

முன்னதாக வல்லினத்தின் எட்டு ஆண்டுகளின் செயல்பாடுகள் திரையில் ஒளிப்பரப்பாகி அதன் தீவிரமான செயல்பாடுகளை வருகையாளர்களுக்கு எடுத்துக் காட்டியது.

அடுத்ததாக ‘வல்லினம் விருது’ வழங்கப்பட்ட எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் வாழ்வைச் சொல்லும் படக்காட்சியும் திரையில் ஒளிபரப்பானது. இவ்விரு படத்தொகுப்பையும் எழுத்தாளர் நவீன் செல்வங்கலை அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

unnamed

 (வல்லினம் ஆசிரியர் ம.நவீன் உரையாற்றுகிறார்)

நிகழ்வை அறிமுகம் செய்து வைக்கும் வகையில் வல்லினம் மற்றும் பறை இதழ் ஆசிரியர் ம.நவீன் உரையற்றினார். வல்லினம் குறித்த முன்முடிவுகளை அவர் தனது உரையில் முற்றாக மறுத்தார்.

வல்லினம் மொழியைக் காப்பதற்காகவோ, பெரியாரியத்தை வளர்ப்பதற்காகவோ, மார்க்ஸியத்தைப் போற்றுவதற்காக உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமல்ல எனக்கூறிய அவர் , சிந்திக்கும் ஒரு தலைமுறையை உருவாக்கவே வல்லினம் தொடங்கப்பட்டதாகக் கூறினார். சிந்திப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறது எனவும் , அதை எவ்வாறு கடந்து செல்வது எனவும் அவர் தனதுரையில் குறிப்பிட்டார்.

unnamed (2)

 (வழக்கறிஞர் சி.பசுபதி , அ.ரெங்கசாமிக்கு விருது கோப்பை மற்றும் விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காசோலையை வழங்குகிறார்)

ரெங்கசாமியின் ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ என்ற தலைப்பிலான நூலை எழுத்தாளரும், மருத்துவருமான, மா.சண்முகசிவா வெளியீடு செய்தார்.

இயக்குனர் லீனா மணிமேகலை முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.  தனது உரையில் ரெங்கசாமியின் அந்நூல் குறித்து சண்முகசிவா விரிவாகப் பேசினார். ஒரு சுயவரலாறு நூல் எவ்வாறு சமூகத்தை பாதிக்கிறது என்பதன் அடிப்படையில் அவர் உரை இருந்தது. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் மா.சண்முகசிவா,  ரெங்கசாமியின் சுயவரலாறு நூல் குறித்து பேசினார்.

அ.ரெங்கசாமியின் ஆளுமை குறித்து பேச கெடாவிலிருந்து சுவாமி பிரம்மானந்தா அழைக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே அ.ரெங்கசாமிக்கு தமது தியான மன்றம் மூலம் ‘வாழ்நாள் சாதனையாளர்’ எனும் விருது கொடுத்தவர் என்ற அடிப்படையிலும் அவரது இதர நூல்களை வாசித்தவர் என்ற முறையிலும் ரெங்கசாமியின் ஆளுமை குறித்து விளக்கினார்.

இதற்கு முந்தைய மூத்த தலைமுறையின் தியாகத்தில் இருந்தே இன்றைய தலைமுறை மேலோங்கி செல்கிறது என்பது அவர் உரையின் சாரமாக இருந்தது.

unnamed (1)

 (டாக்டர் சண்முகசிவா இயக்குநர் லீலா மணிமேகலைக்கு அ.ரெங்கசாமியின் புத்தகத்தை வழங்குகின்றார்)

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அ.ரெங்கசாமிக்கு விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வழக்கறிஞர் சி.பசுபதி அ.ரெங்கசாமிக்கு விருது கோப்பை, விருது தொகையான ஐயாயிரம் ரிங்கிட்டுக்கான காசோலை,  வெளியிடப்பட்ட நூலுக்கான உரிமத் தொகை (ராயல்டி) இரண்டாயிரம் ரிங்கிட் என வழங்கி சிறப்பு செய்தார்.

நிகழ்ச்சியில் பேசிய வழக்கறிஞர் சி.பசுபதி, மாற்று சிந்தனைகள் சமூகத்துக்கு உயரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என கூறினார். அதோடு, வல்லினம் ஓர் கட்டமைக்கப்பட்ட இயக்கமாக மாறுவதன் வழி நாடு முழுக்கவும் அதன் தீவிரமான மாற்று சிந்தனை பரவும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முதல் அங்கத்தின் நிறைவாக, விருதைப் பெற்ற எழுத்தாளர் அ.ரெங்கசாமி பேசினார். தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத வல்லினம் தன்னை அடையாளம் கண்டு விருது கொடுத்ததை மகிழ்ச்சியான தருணமாகப் பகிர்ந்துகொண்டார். தமிழர் எனும் நிலைப்பாட்டில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

unnamed (3)

 (எழுத்தாளர் கே.பாலமுருகன் உரையாற்றுகிறார்)

நிகழ்ச்சியின் இரண்டாவது அங்கத்தில் எழுத்தாளர் கே.பாலமுருகன் லீனா மணிமேகலையை அறிமுகம் செய்து வைத்து பேசினார். அவர் கவிதை, திரைப்படம், என விரிவாக தனது ரசனை அடிப்படையில் அறிமுகம் செய்தார்.

அதன் பின்னர்  இரண்டாவது அங்கத்தை கவிஞர், இயக்குனர் லீனா மணிமேகலை வழி நடத்தினார். அவரது அத்தனை ஆவணப்படங்களும் தொகுப்பாக ஒளிபரப்பப்பட்டன. தனது திரைப்பட முயற்சி குறித்து சுருக்கமாகப் பேசியவர் அவையினரிடமிருந்து வந்த சந்தேகங்களுக்கும் பதில் கொடுத்தார். திரைப்படம், சமூகம், அரசியல், ஈழம் என அவர் பதில்கள் விரிவாகவும் ஆழமாகவும் இருந்தன.