Home நாடு நவீன இலக்கியக் களஞ்சியம் – ஆவணப் படக்காட்சிகளோடு வல்லினத்தின் விழா

நவீன இலக்கியக் களஞ்சியம் – ஆவணப் படக்காட்சிகளோடு வல்லினத்தின் விழா

2054
0
SHARE
Ad

vallinam logoகோலாலம்பூர் – ஒவ்வொரு ஆண்டைப் போலவே இவ்வாண்டும் வல்லினம், கலை இலக்கிய விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாண்டு 100-வது வல்லினம் இதழை முன்னிட்டு இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. கடந்த எட்டு ஆண்டுகளாக வல்லினத்தின் பயண அனுபவ ஆவணப்பட காட்சியோடு நிகழ்ச்சி தொடங்கும்.

vallinam-17092017நிகழ்ச்சி விபரங்கள்

நாள் : 17.9.2017 (ஞாயிறு )

#TamilSchoolmychoice

இடம் : கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி (ம இ கா தலைமையகம் எதிர்ப்புறம்)

நேரம் : பிற்பகல் : 2.00

(1.30 க்கு உணவு வழங்கப்படும் )

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.

அனைத்துத் தொடர்புகளுக்கும் :

ம.நவீன் – 0163194522

அ.பாண்டியன் : 0136696944

தயாஜி : 0164734794

களஞ்சிய வெளியீடு

இவ்விழாவுக்கென தயாரிக்கப்பட்ட 464 பக்க நவீன இலக்கிய களஞ்சியம் மலேசிய மற்றும் சிங்கை படைப்பாளிகளின் ஆக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நேர்காணல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனங்கள், ஆய்வுகள் என பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்ட இக்களஞ்சியம் சமகால மலேசிய சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் முகமாகத் திகழும்.

vallinam-book-17092017வல்லினம் 100 – விமர்சனம்

சிங்கை எழுத்தாளர்களான சிவானந்தன் நீலகண்டன், உமா கதிர், ராம் சந்தர் மற்றும் மலேசிய எழுத்தாளர் இளம்பூரணன் ஆகியோர் ‘வல்லினம் 100’ களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதை, கட்டுரை, விமர்சனக்கட்டுரைகள் மற்றும் நேர்காணல் ஆகியவை குறித்து தத்தம் கருத்துகளை/ விமர்சனங்களை முன்வைத்து உரையாற்றுவர்.

எழுத்தாளர் கோணங்கி வருகை

கல்குதிரை என்ற சிற்றிதழை நிறுவி அதனை நிர்வகிக்கும் கோணங்கி, காத்திரமான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.  அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினர் விளக்கு விருது வழங்கி கோணங்கிக்கு மரியாதை செலுத்தியுள்ளார்கள்.  பல சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்துள்ள கோணங்கியின் ஆளுமை விசாலமானது. நிகழ்ச்சியில் அவரது சிறப்புரை இடம்பெறும்.

போட்டி முடிவுகள்

இவ்வாண்டு வல்லினம் நடத்திய சிறுகதை, கட்டுரை மற்றும் பத்திகளுக்கான போட்டி முடிவு இவ்விழாவில் அறிவிக்கப்படும். வெற்றியாளர் ஒருவருக்கு தலா 1000 ரிங்கிட் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.