Home வணிகம்/தொழில் நுட்பம் புரோட்டோனின் புதியத் தலைவர் சீன நாட்டவரா?

புரோட்டோனின் புதியத் தலைவர் சீன நாட்டவரா?

982
0
SHARE
Ad

protonகோலாலம்பூர் – டாங்பெங் ஹோண்டா எஞ்சின் கோ நிறுவனத்தின் துணை நிர்வாகி லீ சுன்ரோங், மலேசியத் தானியங்கி நிறுவனமான புரோட்டோனின் வெளிநாட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவனமான சேஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் குரூப் கோ லிமிட்டட் (கீலி) தலைவராகப் பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

இது குறித்து சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாக ‘சீனா பிரஸ்’ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலில், டாங்பெங் நிறுவனத்திலிருந்து விலகிவிட்ட லீ, கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, கீலி நிறுவனத்தில் இணைந்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.

எனினும், லீ நியமனம் குறித்து கீலி நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிடவில்லை.