Home இந்தியா பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி சுட்டுக் கொலை!

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கௌரி சுட்டுக் கொலை!

1098
0
SHARE
Ad

Gauri Lankeshபெங்களூர் – பெங்களூரில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஸ் அடையாளம் தெரியாத மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

55 வயதான கௌரி நேற்று இரவு தனது வீட்டுக்கு காரில் வந்து இறங்கி, உள்ளே நுழைய முயன்ற போது, மோட்டாரில் வந்த மர்ம நபர், அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

இதில், மார்பிலும், நெற்றியிலும் குண்டு துளைத்த கௌரி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

‘கௌரி லங்கேஸ் பத்திரிக்கே’ என்ற பெயரில் சொந்த நாளிதழை நடத்தி வந்த கௌரி, இந்துத்துவாவுக்கு எதிராகவும், ரோஹின்யா மக்கள் மீதான வன்முறை பற்றியும், கோரக்பூர் குழந்தைகள் மரணம் பற்றியும் தனது பத்திரிகை வாயிலாக பல கடும் விமர்சனங்களை வைத்து வந்தார்.

இதனிடையே, கௌரி கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்த பத்திரிகையாளர்கள் கடும் அதிர்ச்சயடைந்திருப்பதோடு, டெல்லியில் இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.