Home நாடு தமிழ் மலர் சம்பவம்: காவல் துறை புகார்களைப் பெற்றது

தமிழ் மலர் சம்பவம்: காவல் துறை புகார்களைப் பெற்றது

1141
0
SHARE
Ad

malaysian police-logoகோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை மதிய வேளையில் தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகத்தில் வாக்குவாதங்களும், அதைத் தொடர்ந்து கைகலப்புகளும் நிகழ்ந்ததாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து இரண்டு தரப்புகளிடம் இருந்தும் புகார்கள் கிடைக்கப் பெற்றதாக தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத் தலைவர் ஏசிபி முகமட் சுக்ரி கமான் உறுதிப் படுத்தியுள்ளார்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் முகமட் சுக்ரி தெரிவித்ததாக, ஸ்டார் இணையத் தள செய்தி தெரிவித்தது.