சாப்பாடு 80 ரிங்கிட்டா? – அமைச்சு விசாரணை!

    971
    0
    SHARE
    Ad

    stingraycurryஜார்ஜ் டவுன் – 4 உணவு வகைகளுடன் கூடிய இருவருக்கான சாப்பாடுக்கு 80 ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாக, கெடா கூலிமைச் சேர்ந்த பெண் ஒருவர் உணவகம் ஒன்றின் மேல் குற்றச்சாட்டு கூறினார்.

    பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட தகவல் மலேசியர்கள் பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

    இந்நிலையில், பினாங்கு உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவுகள் மற்றும் நுகர்வோர் அமைச்சகம் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்கிறது.

    #TamilSchoolmychoice

    இது குறித்து அமைச்சின் இடைக்கால இயக்குநர் முகமது நூர் மூசா கூறுகையில், “இச்சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வப் புகார் எதுவும் இல்லை. என்றாலும் இந்த விவகாரம் ஊடகங்களில் அதிக அளவில் பரவியதால், இதனை விசாரணை செய்கின்றோம்” என்று தெரிவித்திருக்கிறார்.