Home நாடு மடகாஸ்கரில் புதிய எம்எச்370 பாகம்: உறுதி செய்ய சென்றது மலேசியக் குழு!

மடகாஸ்கரில் புதிய எம்எச்370 பாகம்: உறுதி செய்ய சென்றது மலேசியக் குழு!

929
0
SHARE
Ad

mh370கோலாலம்பூர் – மாயமான எம்எச்370 விமானத்தைச் சேர்ந்த பாகம் என நம்பப்படும் சிறிய பாகம் ஒன்று மடகாஸ்கர் தீவில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, அப்பாகத்தினை உறுதி செய்ய மலேசியக் குழு அங்கு விரைந்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த உடைந்த விமானப் பாகங்களைக் கண்டறியும் ஆர்வலரான பிளைன் ஜிப்சனால் கண்டறியப்பட்டிருக்கும் அப்புதிய பாகம், உள்நாட்டுப் போக்குவரத்து அதிகாரிகளின் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

எனினும், விசாரணை முடியும் வரை, அப்பாகம் பற்றி எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் லியாவ் தியாங் லாய் கூறியிருக்கிறார்.