Home உலகம் ஆசியான் மாநாட்டில் பிரதமர் நஜிப்புடன் நரேந்திர மோடி சந்திப்பு!

ஆசியான் மாநாட்டில் பிரதமர் நஜிப்புடன் நரேந்திர மோடி சந்திப்பு!

564
0
SHARE
Ad

modi-najeeb razakநேபிடா, நவம்பர் 12 – ஆசியான் மாநாட்டில் பிரதமர்  நஜிப் ரசாக்கை நரேந்திர மோடி சந்தித்து பேசினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி தீவு ஆகிய நாடுகளுக்கு 10 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.

முதல் கட்டமாக அவர் மியான்மர் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மியான்மரின் தலைநகர் நேபிடா நகரில் 121–வது ஆசியான் – இந்தியா மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. அதன்படி மாநாடு இன்று தொடங்குகிறது.

மாநாட்டின் போது பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்து பேசினார் மோடி. அப்போது, ‘‘கடந்த காலங்களில் இந்தியாவும், மலேசியாவும் இணைந்து பணியாற்றியுள்ளன. அதே நிலை தனது தலைமையின் கீழ் இயங்கும் அரசும் செயல்படும்’’ என்றார் மோடி.

#TamilSchoolmychoice

பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்த பிறகு பிரதமர் நரேந்திரமோடி மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுத்தார்.