அந்த காணொளி காட்சியில் சிரியா ராணுவ வீரர்கள் பலரது தலை துண்டிக்கப்படும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அப்துல் ரகுமான் கஸ்சிக், சிரியாவில் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார். இவரது தலையை துண்டிக்கப் போவதாக தீவிரவாதிகள் ஏற்கெனவே எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள தனது பெற்றோருக்கு கடிதம் எழுதினார் கஸ்சிக். அதில் உலகில் எந்த மனிதரும் அனுபவிக்கக்கூடாத வேதனை மற்றும் பயத்தை தாம் அனுபவித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் பிறகு அவரது நிலை என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவரது தலையை துண்டித்து தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
வழக்கம் போல் இது தொடர்பான காணொளி காட்சியை தீவிரவாதிகள் இணையத்தில் வெளியிட்டுள்ளதால் அமெரிக்காவில் பரபரப்பு நிலவுகிறது.