Home நாடு திரெங்கானுவில் டைனோசர்கள்!

திரெங்கானுவில் டைனோசர்கள்!

811
0
SHARE
Ad

Iguanodon dinoserகோல திரங்கானு, நவம்பர் 16 – ஆம்! திரெங்கானுவில்தான் டைனோசர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், பயந்து விடாதீர்கள்!

உலு திரங்கானுவில் உள்ள ககாவ் சிகரத்தில் (Mount Gagau) புதிய டைனோசர் படிவங்கள்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கு காணப்படும் காலடித் தடங்கள், எலும்புகள் மற்றும் பற்கள் ஆகியன 3 வெவ்வேறு டைனோசர் வகைகளைச் சார்ந்தவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன்மூலம் இங்கு முன்னொரு காலத்தில் டைனோசர் இன மிருகங்கள் மலேசியாவில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

1.5 சென்டிமீட்டர் நீளம் கொண்ட பற்கள் மற்றும் சில காலடித் தடங்கள், இகுவானோடன் (Iguanodon) வகை டைனோசருடையதாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வில் ஈடுபட்ட 17 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது. மேலே படத்தில் காணப்படுவது இந்த வகை இன டைனோசர்கள்தான்.

#TamilSchoolmychoice

மற்ற காலடித் தடங்கள் மற்றும் எலும்புகள் திதிராபோட் மற்றும் சாராபாட் (thetheropod and sauropod) வகை டைனோசர்களைச் சார்ந்தவை எனத் தெரிய வந்துள்ளது.

“இது ஒரு முக்கியமான, குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. இதனால் திரங்கானு மக்கள் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்,” என்று அம்மாநில மந்திரி பெசார் டத்தோ அகமட் ரசிஃப் ரஹ்மான் கூறியுள்ளார்.

திரங்கானுவில் இப்போதுதான் முதல் முறையாக டைனோசர் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பகாங்கில் இரண்டாவது முறையாக டைனாசர் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில், திரங்கானுவிலும் சில படிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1970களில் தான் ககாவ் சிகரத்தில் டைனோசர் படிவங்கள் இருக்கக்கூடும் என்று முதன்முதலாக கண்டறியப்பட்டது. தற்போது இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள குவானோடன் (Iguanodon) வகை டைனோசர்களின் படிவங்கள் சுமார் 163 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும்.

இத்தகைய படிவங்கள் இதற்கு முன்பு தாய்லாந்தில் உள்ள கோரட் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.