Home உலகம் விடுதலைப் புலிகளுக்கு நார்வே அரசு நிதியுதவி அளித்தது – ராஜபக்சே! 

விடுதலைப் புலிகளுக்கு நார்வே அரசு நிதியுதவி அளித்தது – ராஜபக்சே! 

453
0
SHARE
Ad

rajapakseகொழும்பு, நவம்பர் 17 – இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையின் போது, அப்போதைய நார்வே அரசு விடுதலைப் புலிகளுக்கு பொருளுதவி அளித்தது என இலங்கை அதிபர் ராஜபக்சே குற்றம் சாட்டி உள்ளார்.

இலங்கையின் வடமேற்கு மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

“விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நார்வே அரசு நிதியுதவி அளித்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக, அந்நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும்”.

#TamilSchoolmychoice

“போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட நார்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம், தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத் திட்டமிட்டு வருகிறார்.”

“விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த பொழுது, அவர்களை தோற்கடிக்க முடியாது என்று கூறி, எங்களது மனோபலத்தைக் குறைத்தவர் எரிக் சோல்ஹெய்ம்” என்று அவர் கூறியுள்ளார்.