Home வணிகம்/தொழில் நுட்பம் மீண்டும் தட்டைக் கணினி வர்த்தகத்தில் எச்டிசி!

மீண்டும் தட்டைக் கணினி வர்த்தகத்தில் எச்டிசி!

627
0
SHARE
Ad

htcகோலாலம்பூர், நவம்பர் 17 – எச்டிசி (HTC) நிறுவனம் மீண்டும் தட்டைக் கணினி வர்த்தகத்தில் ஈடுபட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான எச்டிசி, கூகுளுடன் இணைந்து தற்போது நெக்சஸ் 9 தட்டைக் கணினிகளைத் தயாரித்து வருகின்றது.

இந்நிலையில், நெக்சஸ் 9 வெளியீட்டிற்கு பின்பு, தனித்த எச்டிசி தட்டைக் கணினிகளை வெளியிட அந்நிறுவனம் முயன்று வருவதாக தொழில்நுட்பப் பத்திரிக்கைகள் கூறியுள்ளன.

#TamilSchoolmychoice

மேலும் இது தொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சேங் சியா லின் ‘போகஸ் தைவான்’ (Focus Taiwan) எனும் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

HTC-Windows-RT-Tablet“2015-ல் தனித்த தட்டைக் கணினிகளை வெளியிட எச்டிசி முடிவு செய்துள்ளது. எனினும், அது குறைந்த விலை தட்டைக் கணினிகளாக இருக்காது”.

“தனித்த  தட்டைக் கணினிகளை தயாரிக்க முடிவு செய்து இருந்தாலும், கூகுள் போன்ற நிறுவனங்களுடன் இணை தயாரிப்புகளை தொடர்ந்து எங்கள் நிறுவனம் செய்து வரும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த இரு காலாண்டுகளில் எச்டிசி வெற்றிப் பாதையில் பயணித்து வருகின்றது. இதன் காரணமாக தொழில்நுட்பச் சந்தைகளில் தனது இடத்தை நிலைபெறச் செய்ய தனித்த தயாரிப்புகளை வெளியிட அந்நிறுவனம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுவது குறிப்படத்தக்கது.