Home உலகம் ஜி-20 மாநாட்டின் நிறைவு விழாவில் பாதியில் வெளியேறிய புடின்!

ஜி-20 மாநாட்டின் நிறைவு விழாவில் பாதியில் வெளியேறிய புடின்!

640
0
SHARE
Ad

vladimir-putinபிரிஸ்பேன், நவம்பர் 17 – பிரிஸ்பேனில் நேற்றுடன் நிறைவடைந்த ஜி-20 மாநாட்டின் நிறைவு விழாவில், ரஷ்ய அதிபர் புடின் பாதியில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு, ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உலகின் முக்கியத் தலைவர்களான அமெரிக்க அதிபர் ஒபாமா, கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் கலந்து கொண்டார். மாநாட்டின் இடைவேளையில் ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

#TamilSchoolmychoice

அப்போது, புடினிடம் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையீடு குறித்து ஒபாமா, டேவிட் கேமரூன் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். உக்ரைன் சுதந்திரமாக செயல்பட, ரஷ்யாவுடன் உடன்படிக்கை அவசியம் என்பதையும் அவர்கள் வலியுறுத்தினர்.

இதனால் புடின் கடும் எரிச்சல் அடைந்ததாகவும், நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில், தனது எதிர்ப்பைக் காட்டும் பொருட்டு பாதியில் அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது.

அரங்கத்தில் இருந்து வெளியேறியது பற்றி புடின் கூறுகையில், “பிரிஸ்பேன் நகரிலிருந்து விளாடிவோல்ஸ்டாக்குக்கு விமானத்தில் செல்ல 9 மணி நேரமாகும்”.

“அடுத்து, அங்கிருந்து மாஸ்கோ நகரைச் சென்றடைய, மேலும் 9 மணி நேரம் பிடிக்கும். விமானப் பயணமே 18 மணி நேரம் என்பதால், நானும் எனது அதிகாரிகளும், குறைந்தது நான்கைந்து மணி நேரமாவது ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது.”

“எனவே தான் மாநாடு முடியும் முன்பே புறப்படுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.  புதினின் இந்த செயல் உலகத் தலைவர்களை அவமதிக்கும் விதமாக உள்ளது என்ற சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.