Home தொழில் நுட்பம் இனி தனித்த ஸ்கைப் தேவை இல்லை – உலாவியே போதுமானது!

இனி தனித்த ஸ்கைப் தேவை இல்லை – உலாவியே போதுமானது!

560
0
SHARE
Ad

skype-கோலாலம்பூர், நவம்பர் 18 – மைக்ரோசாப்ட் நிறுவனம் ‘உலாவிகள்’ (Browsers) மூலமாகவே இணைய அழைப்புகளை ஏற்படுத்தக் கூடிய ‘ஸ்கைப்’ (Skype)-ன் சோதனைப் பதிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தொழில்நுட்ப கருவிகளில் தனித்த ஸ்கைப் செயலியை மேம்படுத்தத் தேவை இல்லை.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

“இது வரை ஸ்கைப் செயலி பிரத்யேகமாக பதிவிறக்கம் செய்து கணினி உட்பட தொழில்நுட்பக் கருவிகளில் மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. இனி அதற்கான அவசியம் இல்லை. இணைய உலாவியே போதுமானது”

#TamilSchoolmychoice

“தற்சமயம் இந்த புதிய முயற்சி சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளியிடப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2003-ம் ஆண்டு அறிமுகமான ஸ்கைப் உலக அளவில் தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத செயலியாக மாறிவிட்டது.  ஒவ்வொரு நாளும் ஸ்கைப்-ல் 2 பில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் காணொளி அழைப்புகளை ஏற்படுத்தவும், இணைய அழைப்புகளை ஏற்படுத்தவும் செலவழிக்கப்படுகிறது.