Home வாழ் நலம் கொழுப்பைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆட்டுப்பால்!

கொழுப்பைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆட்டுப்பால்!

739
0
SHARE
Ad

goat8நவம்பர் 19 – இதுவரை எப்போதாவது நீங்கள் ஆட்டுப் பால் குடித்துள்ளீர்களா? கடைசியாக எப்போது குடித்தீர்கள்? இந்திய தேசப் பிதா காந்தியடிகள் ஆட்டுப் பால் தான் குடித்ததாகப் படித்திருக்கிறோம்.

ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒருமுறை கூட ஆட்டுப் பால் குடித்திருக்க மாட்டோம். ஆட்டுப் பாலில் ஏராளமான சத்துக்கள் உள்ளனவாம். வயிற்று வலிக்கு சிறந்த மருந்து ஆட்டுப் பால்தானாம்.

மேலும் பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா? தினமும் ஆட்டுப் பாலைக் குடித்து வந்தால் நம் உடல் வலுவாகும். பசும் பாலை விட ஆட்டுப் பால் மிகவும் ஆரோக்கியமானது என்பதற்கான சில காரணங்களை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

பசும் பால் குடிக்கும் சிலருக்கு வாயுத் தொல்லைகள் ஏற்படும். இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு ஆட்டுப் பால் ஒரு அருமையான மருந்தாகும். பசும் பாலை விட ஆட்டுப் பாலில் உள்ள கொழுப்பு மூலக்கூறுகள் சிறியவை என்பதும், ஆட்டுப் பாலில் உள்ள பொட்டாசிய அமிலம்தான் இதற்குக் காரணமாகும்.

goat-milkபசும் பாலில் உள்ள கொழுப்பைக் குறைப்பதற்காக அதை மெருகேற்றுவது வழக்கம். பால் நிறுவனங்களில் இது ஒரு முக்கியப் பணியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பிரச்சனை ஆட்டுப் பாலில் கிடையாது.

ஆட்டுப் பாலில் இயற்கையாகவே கொழுப்பு சீரான நிலையில் இருக்கிறது. பசும் பாலில் உள்ள கேசின் என்னும் புரதம் காரணமாக சில குழந்தைகளுக்கு சரும பிரச்சனைகள் ஏற்பட்டு, வாந்தி, வயிற்றுப் போக்கு, எரிச்சல் என்று கஷ்டப்படுவார்கள்.

ஆட்டுப் பாலில் கேசின் என்னும் புரதம் மிகமிகக் குறைவாக இருப்பதால், இந்த தொல்லைகள் கிடையாது. பசும் பாலில் லாக்டோஸ் எனப்படும் பால் அதிகமாக உள்ளது.

ஆட்டுப் பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி12 ஆகியவை அதிகம் உள்ளன. இது தவிர, கால்சியம், புரதம் மற்றும் பாஸ்பரஸ் ஆகிய சத்துக்களும் மிகுதியாக உள்ளன.

194_9447இதனால், ஆட்டுப் பால் சாப்பிடும் போது நமக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஆட்டுப் பாலில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், அதன் சுவை காரணமாகவே சிலர் அதை விரும்ப மாட்டார்கள்.

இதற்கு மாற்றாக, அவர்கள் ஆட்டுப் பாலினால் தயார் செய்யப்பட்ட வெண்ணெய், தயிர், ஐஸ்க்ரீம் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.