Home உலகம் விரைவில் கலைகிறது ஜப்பான் நாடாளுமன்றம் – முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அபே திட்டம்!  

விரைவில் கலைகிறது ஜப்பான் நாடாளுமன்றம் – முன்கூட்டியே தேர்தலை சந்திக்க அபே திட்டம்!  

521
0
SHARE
Ad

shinzo_23டோக்கியோ, நவம்பர் 19 – பொருளாதார நெருக்கடி காரணமாக ஜப்பான் நாடாளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே திட்டமிட்டுள்ளார். மேலும், அடுத்த மாதமே தேர்தலை நடத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பான் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பிரதமர் ஷின்சோ அபே மக்களிடம் தனக்குள்ள செல்வாக்கை நிரூபிக்க தேர்தலை நடத்த திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

அபேயின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் வரும் வெள்ளி அன்று நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

#TamilSchoolmychoice

“ஜப்பான் பொருளாதாரம், மூன்றாம் காலாண்டில் மந்த நிலையை சந்தித்துள்ளது. இந்நிலையில், நாம் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் அவர், தேர்தல் காரணமாக பெரும் சர்ச்சைக்குள்ளான விற்பனை வரி உயர்வை 18 மாத காலத்துக்கு நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளார்.

2012-ம் ஆண்டிலிருந்து ஜப்பான் பிரமதர் அபே-யின் செல்வாக்கு சரிந்து வந்தாலும், உடனடியாக தேர்தலை நடத்தும்பட்சத்தில் அது அபே-வுக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அங்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறுண்டு இருகின்றன. முன்கூட்டியே தேர்தல் நடத்துவதன் மூலமாக அபே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.