Home கலை உலகம் மீண்டும் சொந்தப்படம் தயாரிக்கும் இளையராஜா!

மீண்டும் சொந்தப்படம் தயாரிக்கும் இளையராஜா!

667
0
SHARE
Ad

Ilayaraja-Wallpapersசென்னை, நவம்பர் 19 – விரைவில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. இதற்காக சில இளம் நாயகர்களிடம் கால்ஷீட் கேட்கும் எண்ணத்தில் உள்ளாராம்.

இதற்கு முன்பு ‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்த அனுபவம் ராஜாவுக்கு  உண்டு. ஆனால் அவரது மூத்த சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் படத் தயாரிப்பில் ஈடுபட்டால் என்ன? என்கிற யோசனை ராஜாவுக்கு  தற்போது வந்திருக்கிறதாம். ஆனால் இம்முறை முன்னணி  கதாநாயகர்களை வைத்து தான் சொந்தப்படம் தயாரிக்க வேண்டும் என்பது அவரது தீர்மானம்.

#TamilSchoolmychoice

அப்போதுதான் படத்தை சுலபமாக வியாபாரம் செய்ய முடியும், சிக்கலின்றி லாபம் பார்க்க முடியும் என்பது அவரது திட்டமாக உள்ளது. ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகிய முன்னணி நடிகர்கள் இளையராஜா கால்ஷீட் கேட்டால் மறுக்கப் போவதில்லை.

ஆனால் அவர்களின் கால்ஷீட்டுக்காக குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது காத்திருக்க நேரிடும்.  எனவே ராஜாவின் பார்வை தற்போது ஆர்யா, விஷால் போன்ற அடுத்தக்கட்ட நாயகர்கள் மீது பதிந்திருக்கிறதாம்.