Home தொழில் நுட்பம் வைபரில் பொது அளவளாவல் வசதி அறிமுகம்!

வைபரில் பொது அளவளாவல் வசதி அறிமுகம்!

593
0
SHARE
Ad

Viber Imageபுது டெல்லி, நவம்பர் 27 – ‘வைபர்’ (Viber) இந்தியாவில் முதன் முறையாக ‘பொது அளவளாவல்’ (Public Chat) வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் நட்பு ஊடகமான பேஸ்புக் போன்று மற்றவர்களுடன் நேரடியாக அளவளாவ முடியும்.

மேலும், இந்த புதிய வசதி மூலமாக குறுந்தகவல் மட்டுமல்லாது, பல்லூடகத் தகவல்கள், ஒலி/ஒளி துணுக்குகள் போன்றவற்றையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.

வைபர் செயலியின் பயன்பாடு மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதி வேகமாக வளர்ந்து வருகின்றது. இந்தியாவில் தற்சமயம் 33 மில்லியன் பயனர்கள் வைபரைப் பயன்படுத்துகின்றனர். இது அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளை விட அதிகமாகும். அதன் காரணமாகவே இந்த புதிய வசதி முதல் முதலாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த புதிய வசதி பற்றி சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி மேரி ஹார்டி கூறுகையில், “வைபரை உலக அளவில் 460 மில்லியன் பயனர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களின் தகவல் பரிமாற்ற முறையைக்கு புதிய வடிவம் கொடுக்கவே இந்த புதிய அளவளாவல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செல்பேசிகளில் வைபரின் பொது அளவளாவல், பயனர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். “

“பிரபலங்களும் வைபர் மூலமாக தங்கள் ரசிகர்களுடன் நேரடியாக அளவளாவ முடியும். இந்த அளவளாவல் முறையில் யார் வேண்டுமானாலும் மற்ற பயனர்களை அவர்களின் அனுமதியுடன் பின் தொடரலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 130 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியைப் பெற்று வரும் வைபர், இந்த புதிய வசதி மூலமாக மேலும் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.