Home நாடு ஆசியான்-இந்தியா உச்சநிலை சந்திப்பின் வெற்றியைப் பாராட்டி நஜிப்புக்கு மோடி கடிதம்

ஆசியான்-இந்தியா உச்சநிலை சந்திப்பின் வெற்றியைப் பாராட்டி நஜிப்புக்கு மோடி கடிதம்

547
0
SHARE
Ad

Modi Najib meeting in Myanmar 600 x 400கோலாலம்பூர், நவம்பர் 27 – அண்மையில் மியான்மாரின் அரசாங்கத் தலைநகர் நேப்பிடோவில் வெற்றிகரமாக நடந்து முடிந்த ஆசியான்-இந்தியா இடையிலான உச்சநிலை சந்திப்பு வெற்றியடைந்தது குறித்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு நவம்பர் 20ஆம் தேதி பாராட்டுக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த விவரத்தை நேற்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையொன்றில் கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 12ஆம் தேதி நேப்பிடோவில் ஆசியான் கூட்டமைப்பிற்கும் இந்தியாவிற்கும் இடையில் உச்சநிலை சந்திப்பு நடைபெற்றது.

#TamilSchoolmychoice

சந்திப்பின் இடைவேளையின்போது நரேந்திர மோடியும், நஜிப்பும் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றையும் நடத்தினர். இருநாடுகளுக்கும் பலனளிக்கும் விவகாரங்கள், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது நிலவிவரும் வியூக நட்புறவை மேலும் வலுவானதாக ஆக்கும் வழிமுறைகளையும் இரு தலைவர்களும் விவாதித்தினர்.

மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருக்கும் நல்லுறவை மேலும் ஆழமாக்கும் வழிவகைகளைக் காண தான் ஆர்வமாக இருப்பதாகவும், ஆசியானுக்கும், இந்தியாவுக்கும் இடையில் வளர்ச்சி கண்டு வரும் நல்லுறவை மேலும் பலப்படுத்த மலேசியாவின் ஆதரவைத் தான் நாடுவதாகவும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதீத வளர்ச்சி கண்டு வரும் ஆசியான் வட்டாரமும் இந்தியாவும், பொருளாதார ரீதியாக மேலும் உச்சகட்டத்திற்கு செல்ல முடியும் என்றும், அமைதி, நிலைத்தன்மை, மேலும் ஒளிமயமான எதிர்காலம் ஆகிய அம்சங்களில் மேலும் சிறப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் நரேந்திர மோடி நஜிப்பிற்கு எழுதிய கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆசியான் தலைவர்கள் தன்னிடம் காட்டிய நல்லெண்ணம், வழங்கிய ஆதரவு ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது மக்களின் நல்வாழ்வுக்காக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றும் தனது நோக்கத்தில் வெற்றியடைய முடியும் என்ற நம்பிக்கை தன்னிடம் ஏற்பட்டிருப்பதாகவும் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.