Home படிக்க வேண்டும் 2 இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் மொரிஷியஸ் மீண்டும் முன்னிலை!

இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் மொரிஷியஸ் மீண்டும் முன்னிலை!

736
0
SHARE
Ad

புதுடெல்லி, டிசம்பர் 3 -இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் மொரிஷியஸ் நாடு மீண்டும் முன்னிலை பெற்று வருகின்றது. கடந்த ஏப்ரல்-செப்டம்பர் மாதம் வரையிலான கால இடைவெளிகளில் மொரிஷியஸ், இந்தியாவில் 4.19 பில்லியன் டாலர்கள் அளவிற்கு முதலீடு செய்துள்ளது.

Port Louis Mauritius capital City
மொரிஷியஸ் நாட்டின் தலைநகர் போர்ட் லூயிஸ் தோற்றம்

இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மொரிஷியஸை தொடர்ந்து சிங்கப்பூர் 2.41 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து இரண்டாம் இடத்திலும், நெதர்லாந்து 1.95 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், அமெரிக்கா 1.19 பில்லியன் டாலர்களையும் முதலீடு செய்து முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இங்கிலாந்தும் சுமார் 842 மில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்தியாவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த 2013-2014-ம் நிதியாண்டில் சிங்கப்பூர், இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டில் முதலிடம் பெற்றிருந்தது.

அத்தருணத்தில் சிங்கப்பூர் சுமார் 5.98 பில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இது மொரிஷியஸை விட சுமார் 113 மில்லியன் டாலர்கள் அதிகமாகும்.

அதே காலகட்டத்தில் இங்கிலாந்து 3.21 பில்லியன் டாலர்களுடன் மூன்றாம் இடத்திலும், நெதர்லாந்து 2.27 பில்லியன் டாலர்களுடன் நான்காம் இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.