Home வணிகம்/தொழில் நுட்பம் பாகிஸ்தான்-சீனா இடையே நெடுஞ்சாலைப் பொருளாதார மண்டலம்: இந்தியாவிற்கு நெருக்கடி!

பாகிஸ்தான்-சீனா இடையே நெடுஞ்சாலைப் பொருளாதார மண்டலம்: இந்தியாவிற்கு நெருக்கடி!

674
0
SHARE
Ad

kashmirஇஸ்லாமாபாத், டிசம்பர் 4 – பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக நெடுஞ்சாலை அமைத்து பொருளாதார மண்டலத்தை உருவாக்கும் திட்டத்தை சீனாவும், பாகிஸ்தானும் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக காஷ்மீர் பகுதியில், பாகிஸ்தான் , சீனா மூலமாக இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளது.

சீனா – பாகிஸ்தான் இடையே சாலை போக்குவரத்து வசதியுடன் கூடிய பொருளாதார மண்டலம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், கடந்த மாதம் சீனா சென்றிருந்தபோது, இதற்கான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டத்தின் மூலம் பாகிஸ்தான், சீனா இடையே ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக வேலியுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என்று இரு நட்டு அரசு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

#TamilSchoolmychoice

இதன்படி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதர் துறைமுகம் மற்றும் சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தின் காஷ்கர் பகுதியை இணைக்கும் விதத்தில் நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டு, இந்த பொருளாதார மண்டலம் அமைக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

வளைகுடா நாடுகளில் கொள்முதல் செய்யப்படும் எண்ணெய் போன்ற பொருட்களை, சீனா இந்த வழியாக தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, சமீபத்தில் நவாஸ் ஷெரீப் தொடங்கி வைத்துள்ளார். மேலும், சாலை அமைக்கும் பணிக்கு, முழு பாதுகாப்பு வழங்குவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன பிரதமர் லீ, ‘‘அண்டை நாடுகளுடனான சீனாவின் உறவையும், ஒத்துழைப்பையும் இத்திட்டம் வலுப்படுத்தும். பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தின் வளர்ச்சி, எரிசக்தி, மற்றும் மின் துறை ஆகியவற்றில் சீனாவின் ஒத்துழைப்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய திட்டம் மூலம் இந்தியாவிற்கு, காஷ்மீர் பகுதியில் கூடுதல் நெருக்கடி ஏற்படுத்துவதே பாகிஸ்தானின் மறைமுக எண்ணமாக உள்ளது என இந்திய தரப்பு குற்றம் சாட்டி உள்ளது.