Home உலகம் ஆப்கானிஸ்தானில் பறவைகளை தற்கொலைப் படையாக மாற்றும் தலிபான் தீவிரவாதிகள்!

ஆப்கானிஸ்தானில் பறவைகளை தற்கொலைப் படையாக மாற்றும் தலிபான் தீவிரவாதிகள்!

589
0
SHARE
Ad

dove flyingதுர்க்மெனிஸ்தான், டிசம்பர் 3 – ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாண எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நேற்று பறந்து சென்ற பறவை ஒன்றை அந்நாட்டு ராணுவ வீரர்கள் பார்த்தனர்.

அந்த பறவையின் உடலில் மின்வயர்கள், சிறிய அளவிலான பை ஆகியவை தொங்கி கொண்டிருந்தன.உடனே அந்த பறவையை ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பறவையின் உடலில் சிறிய அளவிலான வெடிபொருட்கள், மற்றும் ஜிபிஎஸ் கருவி போன்றவை கட்டப்பட்டிருந்தன.

பறவைகளுக்கு பயிற்சி அளித்து அவைகளை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்த தலிபான் தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

துர்கிமெனிஸ்தான் எல்லை பகுதியில், அளவில் பெரிய பறவைகளின் எண்ணிக்கை சமீபகாலமாக குறைந்து வருகிறது. தற்கொலை படை தாக்குதலுக்காக தீவிரவாதிகள் பறவைகளை பிடித்து வருவதே அப்பகுதியில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கு காரணம் என ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர்.

Dove,இந்த சம்பவத்தின் எதிரொலியாக, பறவைகளையும் கண்காணிக்கும் நிலை ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலுக்கு மனிதர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது பறவைகளையும் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வரூபம்’ படத்தில் புறாவின் காலில் வெடிபொருட்களை கடத்தி வந்து நியூயார்க் நகரில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிடுவார்கள். அந்த பாணியில் தற்போது ஆப்கானிஸ்தானிலும் தீவிரவாதிகள் பயன்படுத்த தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.