Home நாடு ரசிஃப் சிடேக் மீது மான நஷ்ட வழக்கு – லீ சோங் வெய் தகவல்

ரசிஃப் சிடேக் மீது மான நஷ்ட வழக்கு – லீ சோங் வெய் தகவல்

636
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 3 – தடை செய்யப்பட்ட பொருட்களை தாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய முன்னாள் தேசிய பூப்பந்து வீரர் ரசிஃப் சிடேக் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாக லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.

சோங் வெய் தடை செய்யப்பட்ட பொருளைப் பயன்படுத்தி வருவது மலேசிய பூப்பந்து சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பலருக்கும் தெரியும் என்றும், அவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காத்து வருவதாகவும் கடந்த நவம்பர் 11-ம் தேதி அளித்த பேட்டி ஒன்றில் சிடேக் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மேலும் தடை செய்யப்பட்ட பொருளை செலுத்துவதற்காக வெளிநாட்டிலிருந்து மருத்துவர் ஒருவரை சோங் வெய் வரவழைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

“இது தொடர்பாக அவருக்கு (சிடேக்) எனது வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் கிடைத்தவுடன் அவர் என்னை அழைத்து மன்னிப்பு கோரினார். ஆனால் அவர் என்ன செய்தாரோ, அதை மாற்ற இயலாது. இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வோம். அவர் எனது புகழை மங்கச் செய்துவிட்டார்,” என்றார் சோங் வெய்.

ஊக்க மருந்து பரிசோதனையில் இருமுறை தோல்வி கண்ட சோங் வெய் 2 வருட தடையை எதிர்கொண்டுள்ளார். எனினும் கடந்த 15 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளதால் அவருக்கான தண்டனைக் காலம் குறையக்கூடும்.