Home கலை உலகம் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டம் வெளியானது!

அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ முன்னோட்டம் வெளியானது!

629
0
SHARE
Ad

YennaiArindhaalசென்னை, டிசம்பர் 4 – கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், திரிஷா, அனுஷ்கா நடித்து வரும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளனர் படக்குழுவினர்.

படம் முடிவதற்கு முன் படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூபில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இதுவரை இந்த முன்னோட்டத்தை 26 இலட்ச மக்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதையும் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் அஜீத்தும், அருண்விஜயும் தொடக்க காட்சிகளில் நண்பர்களாக வருகிறார்கள். அஜீத்தின் வீரத்தைக் கண்டு சிலிர்க்கும் அருண்விஜய், அடிப்படையில் ஒரு தாதா.

#TamilSchoolmychoice

ஒருமுறை அஜீத் சண்டையிடும் நேர்த்தியைக் கண்டு தனது குருநாதரிடம் அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார். அதன்படியே தனது குருநாதரிடம் அஜீத்தை அழைத்துச் செல்கிறார்.

அப்போது எதிர்பாராத திருப்பமாக, அருண்விஜயின் குருநாதரை குத்திக் கொல்கிறார் அஜீத். அது மட்டுமல்லாது, அருணையும் கைது செய்கிறார்.

அப்போதுதான் அஜீத் ஒரு போலீஸ் அதிகாரி என்பது அருணுக்கு தெரிய வருகிறது. பின்னர் சிறைவாசம் அனுபவிக்கிறார் அருண். வெளியே வந்த பிறகு அஜீத்தின் காதலி திரிஷாவை கொல்கிறார். பிறகு அஜீத்திடம் சவால் விடுகிறார்.

“அடுத்து உன் காதலியின் குழந்தையை கொல்வேன். பிறகு உனது தோழியை (அனுஷ்கா) கொல்வேன். முடிந்தால் தடுத்துப்பார்,” என்று அருண்விஜய் சவால் விட, இருவருக்கும் இடையே அனல் பறக்கும் மோதல் நிகழ்கிறது என படத்தின் கதை வெளியாகியுள்ளது.