Home கலை உலகம் கலைஞர் தொலைக்காட்சியின் ‘இசை மேடை’: மலேசியாவில் நடந்த இறுதிச்சுற்றில் திவ்யா வெற்றி!

கலைஞர் தொலைக்காட்சியின் ‘இசை மேடை’: மலேசியாவில் நடந்த இறுதிச்சுற்றில் திவ்யா வெற்றி!

642
0
SHARE
Ad

isai medaiபெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 –  கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மிகப் பிரபல இசை நிகழ்ச்சியான ‘இசை மேடை’-ன் இறுதிச் சுற்று கடந்த செவ்வாய்க் கிழமை மாலை பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரில் நடைபெற்றது.

மலேசிய சுற்றுலாத்துறை, லிபர்டி மீடியா மற்றும் தமிழ்மலர் நாளிதழ் ஏற்பாட்டில் மாபெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பாடல் போட்டியுடன் சேர்த்து ‘விடியல்’ வார இதழ் அறிமுகம், விருது வழங்குதல் போன்ற அங்கங்கள் இடம் பெற்றன.

இந்தப் போட்டியில் முதல் பரிசான இரண்டரை லட்ச இந்திய ரூபாயை பாடகி திவ்யாவும், இரண்டாம் பரிசான ஒன்றரை லட்ச இந்திய ரூபாயை பாடகர் பிரவீனும், மூன்றாவது பரிசான ஒரு லட்ச ரூபாயை பாடகி விஜயலட்சுமியும் வென்றனர்.

#TamilSchoolmychoice

இந்த இறுதிச்சுற்றில் நடுவர்களாக ராஜெஷ் வைத்யா, தீபன் சக்ரவர்த்தி, ஏர்.ஆர்.ரெஹானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தப் போட்டியில் பங்குபெற்ற ஆறு பேருக்கும் ஓம்ஸ் அறவாரியத்தின் சார்பாக தங்கப்பதக்கத்தையும், வெற்றி பெற்ற மூவருக்கு பரிசுகளையும் ‘செந்தமிழ்ச் செல்வர்’ ஓம்ஸ் தியாகராஜன் வழங்கி கௌரவித்தார்.