Home நாடு பள்ளி வாசலையும், ரெம்பாவ் அம்னோ அலுவலகத்தையும் சேதப்படுத்திய 5 பேர் கைது

பள்ளி வாசலையும், ரெம்பாவ் அம்னோ அலுவலகத்தையும் சேதப்படுத்திய 5 பேர் கைது

466
0
SHARE
Ad

PDRMசிரம்பான், டிசம்பர் 4 – தாமான் சிரம்பான் ஜெயா பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும் ஜாலான் சிரம்பான்-தம்பின் சாலையில் உள்ள ரெம்பாவ் அம்னோ தொகுதி அலுவலகத்தையும் சேதப்படுத்திய ஐந்து நபர்களை காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

32 வயதுக்குட்பட்ட இந்த ஐந்து பேரும் ஒரே குழுவாக செயல்பட்டு வந்துள்ளனர் என சிரம்பான் வட்டார காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் சாக்கி ஹாருண் தெரிவித்தார். அவர்கள் மேல் விசாரணைக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பொதுச் சொத்தையும், வழிபாட்டுத் தலத்தையும் சேதப்படுத்திய குற்றத்திற்காக அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய சாயத்தின் மாதிரிகளை புலனாய்வுத் துறை நிபுணர்கள் ஆய்வுக்காக எடுத்துள்ளனர் என்றும், விசாரணைகள் முடிவதற்கும் முன்னால் எந்தவித முடிவுக்கும் வர இயலாது என்றும் ஏசிபி முகமட் சாக்கி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் அருகருகே இருக்கும் பள்ளிவாசலும் அம்னோ தொகுதி அலுவலகமும் சில சின்னங்கள் வரையப்பட்டும், சில வார்த்தைகள் பொறிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து காவல் துறையில் புகார்களும் செய்யப்பட்டன.

-பெர்னாமா