Home இந்தியா ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின் – சட்டசபையில் பரபரப்பு!

ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்திய மு.க.ஸ்டாலின் – சட்டசபையில் பரபரப்பு!

675
0
SHARE
Ad

stalin_opsசென்னை, டிசம்பர் 5 – திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததால் சட்டப்பேரவை வளாகமே பரபரப்பாகியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜெயலலிதா பதவியை இழந்ததால், நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்றார்.

பின்னர், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை பினாமி முதல்வர், பொம்மை முதல்வர் என்றும் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி வந்தார்.

#TamilSchoolmychoice

மேலும் தமிழக சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்றும் எப்போது கூட்டுவார் என்றும் ஓ.பன்னீர் செல்வம் அறிவிக்க வேண்டும் என்றும் அறிக்கை விட்டார். இந்நிலையில், ஒருவழியாக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது.

மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த மு.க.ஸ்டாலின் நேற்று நேரடியாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்று சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்.