Home இந்தியா மோடி தலைமையில் முதல்வர்கள் மாநாடு – மம்தா, ஒமர் அப்துல்லா புறக்கணிப்பு!

மோடி தலைமையில் முதல்வர்கள் மாநாடு – மம்தா, ஒமர் அப்துல்லா புறக்கணிப்பு!

572
0
SHARE
Ad

modi-1_650சென்னை, டிசம்பர் 8 – பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று காலை முதல்வர்கள் மாநாடு நடந்தது. இம் மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று புறப்பட்டு சென்றார்.

அவருடன் தலைமை செயலர் ஞானதேசிகனும் சென்றார். இந்த கூட்டத்தை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் புறக்ணித்தனர்.

இவர்கள் அரசியல் ரீதியிலான தங்களின் காழ்ப்புணர்ச்சியை காட்டும் விதமாக இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.  நாட்டின் முன்னேற்ற வளர்ச்சிக்கு முக்கிய காரண அமைப்பாக இருந்து வரும் திட்ட ஆணையம் மாற்றி அமைக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

modi-planningநீண்ட காலமாக பழங்கால முறையையே பின்பற்றி வரும் இந்த அமைப்பில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் இன்றைய சூழலுக்கு ஏற்ற வேக பரிமாண வளர்ச்சியை நோக்கி இந்தியாவை கொண்டு செல்ல முடியும் என்பது பிரதமர் மோடியின் எண்ணம் .  இதற்கான ஆலோசனையே மாநில முதல்வர்களுடன் நடத்தப்படுகிறது.