Home உலகம் பிலிப்பைன்சைத் தாக்கிய கோரப் புயல்: 27 பேர் பலி – பத்து இலட்சம் மக்கள் அவதி!

பிலிப்பைன்சைத் தாக்கிய கோரப் புயல்: 27 பேர் பலி – பத்து இலட்சம் மக்கள் அவதி!

540
0
SHARE
Ad

 Filipino typhoon victims burn collected debris at a coastal village in the typhoon hit town of Villarial, Samar island, Philippines, 08 December 2014.  Typhoon Hagupit weakened into a tropical storm as it moved towards the Philippine capital after killing at least 27 people and displacing more than one million people in the eastern and central provinces. Hagupit slammed into the country's eastern coast on 06 December evening, bringing heavy rains and gale-force winds that flattened homes, ripped off roofs, and knocked out power and communications.  EPA/FRANCIS R. MALASIGமணிலா, டிசம்பர் 9 – பிலிப்பைன்சிலுள்ள சாமார் தீவின் வில்லாரியால் என்ற ஊரில் கோரப் புயல் ‘ஹாகுபிட்’ தாக்கியதைத் தொடர்ந்து, அந்த ஊர் மக்கள் விளைந்த சேதங்களையும், குப்பைக் கூளங்களையும் சேகரித்து எரித்த காட்சி இது.

கிழக்கு மற்றும் மத்திய பிலிப்பைன்சை கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தாக்கி, இதுவரை 27 பேர்களை பலி கொண்டுவிட்ட இந்தப் புயல், ஏறத்தாழ பத்து இலட்சம் மக்களை வீடிழக்கச் செய்து – இடமாற்றம் செய்து – அவதிக்குள்ளாகிவிட்டது.

கனத்த மழை, கடுமையான புயல் காற்றின் சீற்றம், தரைமட்டமாக்கப்பட்ட வீடுகள், பெயர்த்தெடுக்கப்பட்ட கூரைகள், தொலைத் தொடர்பு, மின்சக்தி துண்டிப்புகள் – இவைதான் ஹாகுபிட் புயல் விட்டுச் சென்ற தடயங்கள்…

#TamilSchoolmychoice

படம் : EPA