காத்மண்டு, டிசம்பர் 9 – நேபாள தலைநகர் காத்மண்டுவில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் பலியாகினர். மலை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து அதிக மக்கள் இருந்ததால் சரிந்து விபத்திற்குள்ளானது.
இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, “பொஹரகடா கிராமத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த பேருந்து, மலைப்பாததையில் இருந்து 2000 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது”.
“இதில் பேருந்தில் பயணித்த 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பேருந்தில் 37 இருக்கைகள் இருந்த நிலையில், 67 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது”.
“காத்மண்டுவிலிருந்து சுமார் 250 மைல்களுக்கு அப்பால் குறுகிய மலை சாலையில் பேருந்து சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினாலே விபத்துகள் அதிகமாக நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது”.