Home இந்தியா ஜெயலலிதாவின் ஆவணங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!

ஜெயலலிதாவின் ஆவணங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!

420
0
SHARE
Ad

jayalalithaaகர்நாடகா, டிசம்பர் 9 – சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பிலான ஆவணங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பிலான ஆவணங்களை அவரது தரப்பு வழக்கறிஞர்கள் பன்னீர்செல்வம், அசோகன் உள்ளிட்டோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்கள்.

#TamilSchoolmychoice

இதற்காக 4 பேருக்கும் 2.15 லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் தொடங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.