Home இந்தியா பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருப்பதி வந்தார் ராஜபக்சே!

பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருப்பதி வந்தார் ராஜபக்சே!

502
0
SHARE
Ad

rajapaksa54திருப்பதி, டிசம்பர் 10 – பலத்த எதிர்ப்புகளுக்கிடையே திருப்பதி வந்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்சே. இலங்கையில் இருந்து தனி விமானம் மூலம் ரேனிகுண்டா வந்திறங்கிய ராஜபக்சே, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருப்பதி சென்றார்.

சித்தூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் ராஜபக்சேவுக்கு வரவேற்பு அளித்தனர். ராஜபக்சே வருகையை ஒட்டி திருப்பதி முழுவதும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலைப்பாதைகள், வராக சுவாமி கோயில், தங்க ரதம் இருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அனைத்து இடங்களிலும் வாகன தணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் நடைபெற உள்ள இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்ற பிரார்த்தனை செய்வதற்காக ராஜபக்சே திருப்பதி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று இரவு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை நடத்தும் ராஜபக்சே, நாளை காலை 9 மணி அளவில் திருப்பதியில் இருந்து இலங்கை செல்ல உள்ளதாகத் தெரிகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ராஜபக்சேவின் வருகையால் திருப்பதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.