Home உலகம் இதுவரை எபோலா நோய்க்கு 6300 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!

இதுவரை எபோலா நோய்க்கு 6300 பேர் பலி – உலக சுகாதார அமைப்பு தகவல்!

484
0
SHARE
Ad

Ebola_virus_virionஜெனீவா, டிசம்பர் 10 – மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோயால் இதுவரை 6331 பேர் உயிரிழந்துள்ளனர். 17,834 பேர் இந்நோயால் பாதிகப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, லைபீரியா, சியரா லியோன் ஆகியவற்றில் எபோலா நோய் பரவி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் இந்நோய் கினியாவில் கண்டறியப்பட்டது.

உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கி வரும் எபோலாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நோயை கட்டுப்படுத்த மலேசியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

#TamilSchoolmychoice

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு எபோலா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் இதுவரை இந்நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை.

இங்கு எபோலா நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது.  எபோலா நோய்க்கு இதுவரை 6,331 பேர் உயிரிழந்துள்ளனர். 17,834 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லைபீரியாவில் கடந்த 3-ஆம் தேதி வரை எபோலாவால் 3,177 பேர் உயிரிழந்துள்ளனர். 7719 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சியரா லியோனில் 1742 பேர் இறந்துள்ளனர். 7798 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சியரா லியோனில் 1583 பேர் பலியாகியுள்ளனர். 7312 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கினியாவில் 1412 பேர் உயிரிழந்துள்ளனர். 2283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர அமெரிக்காவில் ஒருவரும், நைஜீரியாவில் 8 பேரும் எபோலாவுக்கு பலியாகியுள்ளனர். உலகம் முழுவதிலும் ஸ்பெயின் உள்ளிட்ட 8 நாடுகளில் இந்நோயின் தாக்கம் உள்ளது.