Home உலகம் ஏழை பிரதமர்கள் பட்டியலில் நேபாள பிரதமர் முதலிடம்!

ஏழை பிரதமர்கள் பட்டியலில் நேபாள பிரதமர் முதலிடம்!

434
0
SHARE
Ad

sushilகாத்மண்டு, டிசம்பர் 10 – ஏழை பிரதமர்கள் பட்டியலில் நேபாள பிரதமர் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு சொந்தமாக 3 செல்பேசிகள் மட்டுமே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் 74 வயதான சுஷில் கொய்ராலா  கடந்த மார்ச் மாதம் நேபாள பிரதமராக பதவி ஏற்றார். இந்நிலையில் அவரும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும் தங்களது சொத்து பட்டியலை அரசிடம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதனையடுத்து, அவர்கள் தாக்கல் செய்த பட்டியலில் பிரதமர் கொய்ராலா அவரிடம் 3 செல்பேசிகள் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இவை தவிர அவருக்கு வீடு, நிலம், வங்கியில் பணம் இருப்பு, நிதி நிறுவனங்களில் பங்கு மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் எதுவும் இல்லை. இவர் திருமணமாகாதவர். இவருக்கென்று குடும்பம் எதுவும் இல்லை.

கையில் ஒரு கடிகாரமும், தங்க மோதிரமும் அணிந்துள்ளார். சுஷில் கொய்ராலா நேபாளத்தின் 37-வது பிரதமர் ஆவார். தற்போது சர்வதேச அளவில் உள்ள ஏழை பிரதமர்கள் பட்டியலில் இவரும் இணைந்துள்ளார்.