Home உலகம் வியாழன் துணை கோளில் உயிர் வாழ ஏற்ற சூழல்

வியாழன் துணை கோளில் உயிர் வாழ ஏற்ற சூழல்

936
0
SHARE
Ad

viyalanலண்டன், பிப்.27- வியாழன் கிரகத்தின், துணை கோளான, “யூரோப்பா’வில் உயிர்கள் வாழ சூழல் உள்ளதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியை போல, மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ ஏற்ற சூழல் உள்ளதா என்பதை அறிய, விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின், நாசா விண்வெளி ஆய்வு மைய நிபுணர், ராபர்ட் பப்பலார்டோ கூறியதாவது:-

#TamilSchoolmychoice

சூரிய குடும்பத்தில் உள்ள, வியாழன் கிரகத்தின், ஆறாவது துணை கோளான, யூரோப்பாவின் நிலப்பரப்பில், கடல், பனிப்படலம் மற்றும் பிராணவாயு மூலக்கூறுகள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை விடவும், இந்த நிலவில், உயிர்கள் வாழ ஏற்ற சூழல், அதிமாக உள்ளது.

இந்த நிலவை ஆய்வு செய்ய, வரும், 2021ல், “கிளிப்பர்’ என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, ராபர்ட் பப்பலார்டோ கூறினார்.