Home கலை உலகம் ‘வை ராஜா வை’ படத்தில் கொக்கி குமாராக தனுஷ்! (காணொளி உள்ளே)

‘வை ராஜா வை’ படத்தில் கொக்கி குமாராக தனுஷ்! (காணொளி உள்ளே)

573
0
SHARE
Ad

vai raja vaiசென்னை, டிசம்பர் 11 – ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் , ப்ரியா ஆனந்த், டாப்ஸி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை’.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.

இந்த படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என ஏற்கனவே அறிவித்தது போல் படத்தின் முன்னோட்டத்தில் தனுஷ் இடம் பிடித்தார்.

’ என் பேரு குமாரு , கொக்கி குமாரு , கேள்விப்பட்டுகிரியா’ என தெனாவெட்டாக தனுஷ் காரில் இறங்கி வந்து பேசும் வசம் இப்போது சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ எட்டு வருடம் கழித்து என்னை நான் மீண்டும் கொக்கி குமாராக பார்த்தேன். உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். யாராவது மீண்டும் கொக்கி குமாருக்கு தொடர்ச்சி உருவாக்குங்கள்’ என ட்விட் செய்துள்ளார்.

தனுஷ் நடித்த கதாபாத்திரங்களில் ‘புதுப்பேட்டை’ கொக்கி குமார் பாத்திரம் குறிப்பிடத்தக்கது. தனுஷே இந்த பாத்திரத்தை வடிவமைக்கும் படி கூறியதில் மீண்டும் அடுத்த கொக்கி குமார் அடிப்படையில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.