Home அவசியம் படிக்க வேண்டியவை கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி குடும்ப நினைவேந்தல் நிகழ்ச்சி!

கவிஞர் தீப்பொறி பொன்னுசாமி குடும்ப நினைவேந்தல் நிகழ்ச்சி!

809
0
SHARE
Ad

IMAG1152கோலாலம்பூர், டிசம்பர் 16 – கடந்த மாதம் தமிழகத்தில் காலமான மலேசியாவின் புகழ் பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரான தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமிக்கு குடும்ப நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று மாலை தலைநகரிலுள்ள மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தீப்பொறியின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும், முக்கிய அரசியத் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

IMAG1142

#TamilSchoolmychoice

மஇகா-வின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டி.மோகன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மறைந்த கவிஞருக்கு அஞ்சலி செலுத்தினர்.

IMAG1144

மேலும் நாட்டின் பிரபல ஓவியரான லேனா வரைந்த தீப்பொறி பொன்னுசாமியின் உருவப்படத்தை, கவிஞரின் குடும்பத்தாருக்கு டத்தோஸ்ரீ சாமிவேலு வழங்கினார்.