கோலாலம்பூர், நவம்பர் 21 – தமிழகத்தில் காலமான மலேசியாவின் புகழ் பெற்ற மரபுக் கவிஞர்களில் ஒருவரான தீப்பொறி டி.எஸ்.பொன்னுசாமியின் நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகின்றது.
செஞ்சி மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்னாரின் நல்லுடல் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் அங்குள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியுடன் இன்று கோலாலம்பூர் வந்து சேரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை , பத்துமலை, சுங்கை துவா சாலை, பண்டார் பாரு செலாயாங், பாசா 2, எண் 35, ஜாலான் 4/1 என்ற முகவரியில் மலேசியத் திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவரும், புரவலருமான ரெ.சு.முத்தையா தலைமையில் இறுதி மரியாதை சடங்குகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அன்னாரின் நல்லுடல் செராஸ் மின்சுடலை கொண்டு செல்லப்பட்டு, அங்கு தகனம் செய்யப்படும்.
தீப்பொறி பொன்னுசாமியின் நல்லுடலை தமிழகத்திலிருந்து, கோலாலம்பூர் கொண்டு வரும் ஏற்பாட்டை மஇகா வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலமான கவிஞர் தீப்பொறியார், மின்னல் வானொலியின் பிரபல அறிவிப்பாளர்களில் ஒருவரான பொன்.கோகிலத்தின் தந்தையுமாவார்.
மேல் விவரங்களுக்கும் தொடர்புக்கும் :
கவிஞர் பொன்.நிலவன் – 019-202 4013
பொன்.கோமகன் – 019 – 6681834
தீப்பொறிக் கவிஞரின் இளமைக்காலத் தோற்றம் – (இடமிருந்து) தமிழக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.வீரமணி, கவிஞர் தீப்பொறி, மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னாள் தேசியத் தலைவர் கே.ஆர்.இராமசாமி…..
கவிஞர் தீப்பொறியாரின் அண்மையக் காலத் தோற்றம்…..