Home நாடு அமைச்சர்களின் பிள்ளைகள் மட்டும் தேசிய பள்ளிகளில் படிக்கின்றார்களா? – கிட் சியாங் கேள்வி

அமைச்சர்களின் பிள்ளைகள் மட்டும் தேசிய பள்ளிகளில் படிக்கின்றார்களா? – கிட் சியாங் கேள்வி

640
0
SHARE
Ad

Lim Kit Siangகோலாலம்பூர், நவம்பர் 20 – காலங்காலமாக நமது நாட்டில் சர்ச்சையாகத் தொடரும் கல்வி முறை மீண்டும் ஒருமுறை விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றது. சீன, தமிழ்ப் பள்ளிகளால் இன ஒற்றுமை பாதிக்கப்படுகின்றது என்றும், அனைவரும் ஒரே மாதிரியான தேசியப் பள்ளிகளில் பயில வேண்டும் என்றும் அம்னோ சார்பு அறைகூவல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தங்களுடைய பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் தேசிய கல்வி அமைவு முறையின் கீழ் நாட்டிலுள்ள தேசிய பள்ளிகளில் பயின்றவர்களா? என்பதை அமைச்சர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்விக்காக பெருஞ்செலவு செய்யும் நாடு என்று வசைப்பெயரை பெற்றிருந்த போதிலும், அரசாங்கத்தின் அரசியல் தலைமைத்துவமே இந்நாட்டின் தேசிய கல்வி அமைவு முறையில் பெரும் நம்பிக்கைக் கொண்டிருக்கவில்லை என்று அவர் சென்னார்.

#TamilSchoolmychoice

இந்த அவநம்பிக்கைப் பட்டியலில் அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் இடம் பெற்றிருகின்றனர். இவர்களின் குழந்தைகள் தேசிய கல்வி அமைவு முறையில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர் என்று ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

மலேசிய இளைஞர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிள்ளைகளைவிட சிறப்பான கல்வியைப் பெறுகின்றனர் என்று துணை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியதை, அம்னோ தலைவர்களும் பேராளர்களும்கூட நம்பவில்லை என்று கிட் சியாங் கூறினார்.

“மற்ற நாடுகளின் மாணவர்களுடன் ஒப்பிடுகையில், மலேசிய மாணவர்கள் கல்வியில் ஏன் மோசமாக இருக்கின்றனர் என்பது பற்றி அம்னோ பொதுப் பேரவை கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து சீன மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்பது போன்ற இனவாத நாடகம் நடத்துவதையும், ஒப்பாரி வைப்பதையும் தவிர்க்க வேண்டும்” என்று கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான கிட் சியாங் வலியுறுத்தினார்.

a