Home இந்தியா சரவணன், சேலம் ஆத்தூரில் பாரதியார் பெண்கள் கல்லூரியின் கணினி மையத்தைத் திறந்து வைத்தார்!

சரவணன், சேலம் ஆத்தூரில் பாரதியார் பெண்கள் கல்லூரியின் கணினி மையத்தைத் திறந்து வைத்தார்!

214
0
SHARE
Ad
ஆத்தூர் பாரதியார் பெண்கள் கல்லூரியின் கணினி மையத்தை சரவணன் திறந்து வைத்தபோது…அருகில் டத்தோ பிரகதீஷ் குமார்

ஆந்நூர் (சேலம்) – தமிழ் நாட்டுக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், சேலம் ஆத்தூரில் உள்ள பாரதியார் பெண்கள் கல்லூரியில், 120

பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பயிலக்கூடிய கணினி மையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

அந்தக் கல்லூரியின் உரிமையாளரும் பிரபல மலேசிய வணிகருமான டத்தோ பிரகதீஷ் குமார் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை அக்டோபர் 6-ஆம் தேதி இந்த நிகழ்ச்சி சிறப்புற நடந்தேறியது.