Home நாடு டாக்டர் அப்பள நாயுடு காலமானார்!

டாக்டர் அப்பள நாயுடு காலமானார்!

427
0
SHARE
Ad
டத்தோ டாக்டர் அப்பள நாயுடு

கோலாலம்பூர்: தலைநகர் செந்தூலில், செந்துல் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை நிறுவி நீண்ட காலம் மகப்பேறு துறையில் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த டத்தோ டாக்டர் அப்பள நாயுடு தனது 76-வது வயதில் இன்று சனிக்கிழமை அக்டோபர் 5-ஆம் தேதி காலமானார்.

மருத்துவத் துறையில் சேவையாற்றியதோடு மலேசிய தெலுங்கு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்களிலும் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார். கெடாவில் மஇகாவில் பிரபல அரசியல்வாதியாக இருந்ததோடு, தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தில் இயக்குநராக பல்லாண்டு காலம் சேவையாற்றிய முன்னாள் செனட்டர் பலராமன் அவர்களின் இளைய சகோதரர்தான் அப்பள நாயுடு ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கீழ்க்காணும் முகவரியில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை நடைபெறும்.

#TamilSchoolmychoice