Home இந்தியா வரம்பு மீறி பேச வேண்டாம் பா.ஜ.க அமைச்சர்களுக்கு மோடி எச்சரிக்கை!

வரம்பு மீறி பேச வேண்டாம் பா.ஜ.க அமைச்சர்களுக்கு மோடி எச்சரிக்கை!

366
0
SHARE
Ad

Narendra_Modi.06புதுடெல்லி, டிசம்பர் 17 – வரம்பு மீறி பேச வேண்டாம் என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோ நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சாக்ஷி மகராஜ், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பற்றாளர் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்ற, மத்திய அமைச்சர் சுஷ்மாவின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன.

#TamilSchoolmychoice

டெல்லியில் நடந்த பாஜக பேரணியில், ராமரின் வழிவந்தவர்களை ஆட்சியாளர்களாக தேர்வு செய்யப் போகிறீர்களா அல்லது தவறான முறையில் பிறந்தவர்களை ஆட்சியாளர்களாக தேர்வு செய்யப் போகிறீர்களா என்று கேட்டு, மற்றொரு பாஜக அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி சர்ச்சையை கிளப்பினார்.

அதேபோன்று, மத வன்முறையை தூண்டும் வகையில் பேசுவதாக, பாஜக அமைச்சர் யோகி ஆதியநாத் மீது குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.

இந்த விவகாரங்களை வலுவாகப் பிடித்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு அவைகளை முடக்கி வருகின்றன.

இது நரேந்திர மோடி அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நேற்று நடந்த பாஜக அமைச்சர்கள் கூட்டத்தில் மோடி பேசியதாவது:

“நாம் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப் பணிகள், கண்களால் காணக்கூடிய வகையில் களத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெறும் காகிதத்தில் மட்டும் இருக்கக்கூடாது”.

“வளர்ச்சிப் பணியில் இருந்து, இந்த அரசு தடம்புரண்டு விடக்கூடாது. வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25-ஆம் தேதியை, நல்லாட்சி தினமாக கொண்டாடும் வகையில், கருத்தரங்கம், மாநாடுகளை அன்றை தினத்தில் நடத்த வேண்டும்”.

“கட்சிக்கும், அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், வரம்பு மீறி சர்ச்சைக்குரிய பேச்சுக்களை பாஜக அமைச்சர்கள் பேசக்கூடாது என மோடி எச்சரித்துள்ளார்.