Home உலகம் எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையின் எதிரொலியே பெஷாவர் தாக்குதல்: தலிபான்கள் விளக்கம்!

எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையின் எதிரொலியே பெஷாவர் தாக்குதல்: தலிபான்கள் விளக்கம்!

498
0
SHARE
Ad

talibanஇஸ்லாமாபாத், டிசம்பர் 17 – “எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையை உணர்த்தவே, பெஷாவர் இராணுவப் பள்ளியைத் தாக்கினோம்” என தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள இராணுவப் பள்ளியை குறி வைத்து தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு நேற்று நடத்திய தாக்குதல், உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

peshawar3_2246187gசுமார் 160 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில் 140-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது, பாகிஸ்தானை மட்டுமல்ல உலகையே நெக்குருகச் செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பு, நேற்று அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

peshawar_attack“வடக்கு வாசாரிஸ்தானில் இராணுவத்தினர் நடத்தும் தாக்குதலுக்கு பழி வாங்கும் விதத்திலேயே இத்தாக்குதலை நடத்தினோம். இராணுவத்தினர் எங்கள் குடும்பத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்”.

“பதிலுக்கு நாங்கள் அவர்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளியை குறிவைத்தோம். எங்கள் குடும்பத்தினர் அனுபவிக்கும் வேதனையை தற்போது இராணுவத்தினரும் உணருவர்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.